/உள்ளூர் செய்திகள்/மதுரை/போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புதுக்கட்டடம் எப்போது? மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா?போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புதுக்கட்டடம் எப்போது? மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா?
போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புதுக்கட்டடம் எப்போது? மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா?
போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புதுக்கட்டடம் எப்போது? மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா?
போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புதுக்கட்டடம் எப்போது? மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா?
ADDED : ஆக 22, 2011 02:35 PM
மதுரை:மூன்று ஆண்டுகளுக்கு முன், அனுமதி பெற்று மதுரை சர்வேயர் காலனியில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட எஸ்.பி., அலுவலக கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்.
ஆனால் கமிஷனர் அலுவலகம் கட்டடம் கட்ட அனுமதி கேட்டு அனுப்பிய திட்ட அறிக்கை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையினரிடம் கிடப்பில் உள்ளது. மதுரையில் இடநெருக்கடியில் தவிக்கும் இந்த கமிஷனர் அலுவலகத்தை இடமாற்ற, போலீஸ் மானியக் கோரிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகே, தெற்கு காவல் கூடல்தெருவில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. சித்திரை வீதிகளில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் வரை, அலுவலகத்திற்கு வர, தெற்கு சித்திரை வீதியைதான் போலீசார் பயன்படுத்தினர். தற்போது கமிஷனர் கார் உட்பட அனைத்து வாகனங்களும் நெருக்கடியான நகை கடை பஜார் வழியாகதான் சென்றுவர வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, அழகர்கோவில் ரோட்டில், கமிஷனர் பங்களா எதிரே இரண்டு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு திட்ட அறிக்கை, மதிப்பீடு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின் போதே இதற்கான திட்டஅறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. அடுத்து வந்த தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும், ஒரே வளாகத்தில் போலீஸ் பிரிவுகள் அனைத்தும் அமைய வேண்டும் என்ற அதிகாரிகளின் விருப்பத்தால், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மாடலில், பரப்பளவும், கட்டுமான அளவுகளும் மாறின. இதனால் ரூ.60 கோடி மதிப்பிலான இத்திட்டம், காலதாமதத்தால் தற்போது ரூ.65 கோடியாக உயர்ந்துள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி தரவேண்டிய நிதித்துறை, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சந்தேகத்தை கிளப்பி கிடப்பில் போடுவதாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். கமிஷனர் அலுவலகம் கட்டுவது குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என ஒவ்வொரு முறையும் போலீசார் எதிர்பார்த்து ஏமாறுவதுதான் மிச்சம். சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை. ஆக. 23, 24ல் நடக்கும் போலீஸ் மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை அறிவித்து, இந்தாண்டிலாவது கட்டுமான பணியை துவக்க உத்தரவிட வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.