80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி
80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி
80,000 சிம் கார்டுகள் வைத்து மோசடி
ADDED : ஜூலை 24, 2011 09:43 AM
தானே : மும்பையின் புறநகர் பகுதியான தானேயில் 80 ஆயிரம் சிம் கார்டுகளை வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
தானேயின் பின்வாடி பகுதியில் வசித்து வந்த அன்வர் அன்சாரி என்பவர் சர்வதேச தொலைப்பேசி அழைப்புக்கள் வசதி செய்து வருவதாக மோசடி செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அன்வரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் 80,000 சிம் கார்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அன்வரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.