Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தனித் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு

தனித் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு

தனித் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு

தனித் தேர்வுக்கு அனுமதிச் சீட்டு

ADDED : செப் 14, 2011 01:09 AM


Google News
மதுரை :எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கு அனுமதிச் சீட்டுகள் செப்., 17 முதல் 20 வரை வினியோகிக்கப்படும்.பரமக்குடி கல்வி மாவட்டத்தில் சவுராஷ்டிரா மற்றும் அலங்காரமாதா பள்ளிகளிலும், ராமநாதபுரத்தில் சுவார்ட்ஸ் பள்ளி, தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு காரைக்குடி எம்.வி., பள்ளி, சிவகங்கையில் மன்னர் பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்திற்கு ராஜபாளையம் எஸ்.எஸ்.

அரசு பள்ளி, விருதுநகரில் எஸ்.எஸ்.எஸ்.என்., அரசு பள்ளி, உத்தமபாளையம் முகமது பாத்திமா பெண்கள் பள்ளி, பெரியகுளம் வி.எம்.அரசு பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் பள்ளி, திருமங்கலம் பி.கே.என்., பள்ளி, மேலூரில் அரசு பெண்கள் பள்ளி, மதுரை நகர பகுதிக்கு ரட்சண்யபுரம் எல்.பி.என்., பெண்கள் பள்ளியில் வினியோகிக்கப்படும்.மதுரை கல்வி மாவட்டத்தில் மதுரை கல்லூரி பள்ளி, யு.சி., பள்ளி, பழநி கல்வி மாவட்டத்தில் ஆயக்குடி ஐ.டி.ஓ., பள்ளி, பழநி பழனியாண்டவர் மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்லில் புனித மரியன்னை பள்ளி, நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த தனித்தேர்வர்களுக்கு வத்தலகுண்டு அரசு பள்ளியில் வினியோகிக்கப்படும்.அனுமதிச் சீட்டு கிடைக்காதவர், சீட்டில் தவறு இருந்தாலும், மதுரை மண்டல அரசு தேர்வு துணைஇயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் முதல்நாள் சுயமுகவரி எழுதிய ரூ. 30 ஸ்டாம்பு ஒட்டிய தபால் கவரை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும், என துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us