தமிழகத்துடன் மலேசியாவுக்கு வரலாற்று உறவு:மலேசிய தூதரக அதிகாரி பெருமிதம்
தமிழகத்துடன் மலேசியாவுக்கு வரலாற்று உறவு:மலேசிய தூதரக அதிகாரி பெருமிதம்
தமிழகத்துடன் மலேசியாவுக்கு வரலாற்று உறவு:மலேசிய தூதரக அதிகாரி பெருமிதம்

சென்னை:''பொருளாதாரம், சமூகம், கலாசாரத்தில் தமிழகத்துக்கும், மலேசியாவுக்கும் வரலாற்று உறவு உண்டு'' என, இந்தியாவுக்கான மலேசிய துணைத் தூதர், அனூர் கஸ்மான் கூறினார்.மலேசியாவின் 54வது சுதந்திர தின விழா, சென்னையிலுள்ள பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்தது.
சமூக, பொருளாதார முன்னேற்றங்களில், எங்கள் தலைவர்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு, உலகில் உள்ள பல நாட்டு தலைவர்களும், உறுதுணையாக உள்ளனர். இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும் மலேசியாவுக்குமான உறவு, மிக நெருக்கமானது. இருநாடுகளுக்கு இடையே, சமூகம், பொருளாதாரம், கலாசாரம் போன்றவற்றில், பெரும் ஒற்றுமை இருப்பதாக, வரலாறு சொல்கிறது.இந்த ஒற்றுமை, எப்போதும் நீடிக்க வேண்டும் என்பது, எங்கள் விருப்பம். எங்கள் மாணவர்கள், 3 ஆயிரம் பேர் இங்கு படிக்கின்றனர். அந்த அளவுக்கு, இங்கு கல்வி வசதி அதிகம். அதே போல எங்கள் நாட்டிலும், பல இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டில், இந்தியாவுக்கும், மலேசியாவுக்குமான வர்த்தகம், எட்டு பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.இவ்வாறு, அனூர் கஸ்மான் பேசினார்.


