Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஓட்டல்களில் விபசாரம்: கேரளாவை சேர்ந்த 6 புரோக்கர்கள் கைது

ஓட்டல்களில் விபசாரம்: கேரளாவை சேர்ந்த 6 புரோக்கர்கள் கைது

ஓட்டல்களில் விபசாரம்: கேரளாவை சேர்ந்த 6 புரோக்கர்கள் கைது

ஓட்டல்களில் விபசாரம்: கேரளாவை சேர்ந்த 6 புரோக்கர்கள் கைது

ADDED : அக் 09, 2011 01:55 AM


Google News
சென்னை:சென்னையில் பிரபல ஓட்டல், விருந்தினர் மாளிகைகளில் பெண்களை வைத்து விபசாரம் செய்த, கேரளாவைச் சேர்ந்த ஆறு புரோக்கர்கள் உட்பட 12 விபசாரத் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள லாட்ஜ்கள், பிரபல ஸ்டார் ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகளில், வெளிமாநில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக, சென்னை பெருநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பெருநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் தலைமையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.சென்னை தி.நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் ஸ்டார் ஓட்டல், விருந்தினர் மாளிகையில் பெண்களை தங்க வைத்துள்ள சிலர், வாடிக்கையாளர்களை அழைத்து வருவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இத்தகவல்களை உறுதி செய்த தனிப்படை போலீசார், திடீரென முதலில், தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஸ்டார் ஓட்டலில் சோதனையிட்டனர். அதன் பின், தி.நகர் பஸ் நிலையம் அருகில் உள்ள விருந்தினர் மாளிகை, வடபழனியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த, புரோக்கர்களான கேரளாவைச் சேர்ந்த அஸ்லாம், 23, ரணீஷ், 25, அர்ஷத், 25, கஹைப், 24, ஷாவேஸ், 26, முகமது சவாது, 22 ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, பீகார், மும்பை, ஆந்திராவைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

மேலும், அண்ணா நகரில் உள்ள பங்களா வீட்டில், 'மசாஜ் கிளப்' என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த திருவேணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாலாஜி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இது தவிர, சென்னையில் வாகனங்கள், வீடுகளில் வைத்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த புரோக்கர்களான மாதவரத்தைச் சேர்ந்த பாத்திமா, மூலக்கடையைச் சேர்ந்த ப்ரீதா பானு, வேளச்சேரியைச் சேர்ந்த சிவா, குமரன் நகரைச் சேர்ந்த சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் சிக்கியிருந்த 10 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் அனைவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள், மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us