Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கேரளாவில் 15,273 எச்.ஐ.வி., நோயாளிகள் பாலக்காட்டில் அதிகம்; வயநாட்டில் குறைவு

கேரளாவில் 15,273 எச்.ஐ.வி., நோயாளிகள் பாலக்காட்டில் அதிகம்; வயநாட்டில் குறைவு

கேரளாவில் 15,273 எச்.ஐ.வி., நோயாளிகள் பாலக்காட்டில் அதிகம்; வயநாட்டில் குறைவு

கேரளாவில் 15,273 எச்.ஐ.வி., நோயாளிகள் பாலக்காட்டில் அதிகம்; வயநாட்டில் குறைவு

ADDED : அக் 03, 2011 12:16 AM


Google News
Latest Tamil News

திருவனந்தபுரம் : கேரளாவில், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து 273.

இதில், அதிக எண்ணிக்கையாக பாலக்காடு மாவட்டத்தில் 2,660 பேரும், குறைவாக வயநாடு மாவட்டத்தில் 206 பேரும் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நவீன சிறப்பு சிகிச்சையான, ஆன்ட்டி ரிட்ரோ வைரல் ட்ரீட்மென்ட் (ஏ.ஆர்.டி.,) கணக்கின்படி, 15 ஆயிரத்து 273 எச்.ஐ.வி.,நோயாளிகள் உள்ளனர். இதில், பாலக்காடு மாவட்டத்தில், அதிகபட்சமாக 2 ஆயிரத்து 660 பேரும், குறைந்தபட்சமாக வயநாடு மாவட்டத்தில் 206 பேரும் இருப்பது தெரியவந்தது. இதில், மாநிலத்தில் பல இடங்களில் உள்ள ஏ.ஆர்.டி., சிகிச்சை மையங்களில், 5,800 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 3,392 ஆண்களும், 2,111 பெண்களும், 297 குழந்தைகளும் அடங்குவர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us