Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரெப்கோ வீட்டுக்கடன் இலக்கு ரூ.120 கோடி

ரெப்கோ வீட்டுக்கடன் இலக்கு ரூ.120 கோடி

ரெப்கோ வீட்டுக்கடன் இலக்கு ரூ.120 கோடி

ரெப்கோ வீட்டுக்கடன் இலக்கு ரூ.120 கோடி

ADDED : ஆக 21, 2011 11:38 PM


Google News
திருப்பூர் : ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் புதிய அலுவலகம் திறப்பு விழா, திருப்பூரில் நடந்தது; கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்து,அலுவலகத்தை திறந்து வைத்தார்.ரெப்கோ செயல் இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசுகையில், ''ரெப்கோ திருப்பூர் கிளை ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை 100 கோடி ரூபாயை வீட்டு கடனாக வழங்கியுள்ளது. இந்தாண்டு இலக்காக 120 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நிறைந்த வளர்ச்சியடைந்த நிறுவனமாக ரெப்கோ திகழ்கிறது,'' என்றார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில்,''எளிதாக கிடைக்க கூடிய சேவையை ரெப்கோ அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன் உடனடியாக வழங்கும் நிறுவனமாகவும் உள்ளது,'' என்றார். தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை வழங்கினார். இதில், ரெப்கோ வங்கி துணை பொது மேலாளர் மற்றும் கோவை கிளை மேலாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us