/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஏழைகளுக்கு இலவச பட்டா : அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமிஏழைகளுக்கு இலவச பட்டா : அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி
ஏழைகளுக்கு இலவச பட்டா : அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி
ஏழைகளுக்கு இலவச பட்டா : அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி
ஏழைகளுக்கு இலவச பட்டா : அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி
ADDED : அக் 03, 2011 01:00 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி 27வது வார்டில் ஏழைகளுக்கு இலவச பட்டா பெற்று கொடுக்க முயற்சிப்பேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் ஆதிலட்சுமி கூறினார்.
அவர் கூறியதாவது: அழகர்நகர், பாரத்நகர், ஜவஹர்லால்புரம், கொடிக்குளம், மருதங்குளம், சம்பக்குளம், அந்தனேரியில் பட்டா இல்லாதவர்களுக்கு இலவச பட்டா பெற்று கொடுக்கப்படும். ரோடுகள் புதுப்பிக்கப்படும். இப்பகுதியில் ஏராளமான வீடுகளுக்கு இணைப்பு வழங்கியும், குடிநீர் சப்ளை இல்லை. இவர்களுக்கு மருதங்குளம் மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்பகநகரில் மழைநீர் சேகரிப்பு கால்வாய், பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை. கழிவுநீர் கலப்பதால் போர்வெல் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. இது சீர் செய்யப்படும். வார்டில் தேக்கி நிற்கும் தண்ணீர் மற்றும் குப்பை அகற்றி தூய்மையான வார்டாக மாற்ற முயற்சி செய்வேன். பன்றி, நாய் தொல்லை அதிகம். மாநகராட்சி உதவியுடன் அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுப்பேன். தினமும் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்டு, தீர்க்க பாடுபடுவேன். கற்பகநகரில் புறக்காவல் நிலையம், சூர்யா நகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா, அரசு பள்ளி திறக்க பாடு படுவேன், என்றார்.


