/உள்ளூர் செய்திகள்/மதுரை/கோட்டைச்சுவர் அருகே மீண்டும் ஆக்கிரமிப்புகள்கோட்டைச்சுவர் அருகே மீண்டும் ஆக்கிரமிப்புகள்
கோட்டைச்சுவர் அருகே மீண்டும் ஆக்கிரமிப்புகள்
கோட்டைச்சுவர் அருகே மீண்டும் ஆக்கிரமிப்புகள்
கோட்டைச்சுவர் அருகே மீண்டும் ஆக்கிரமிப்புகள்
ADDED : செப் 21, 2011 12:10 AM
மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கோட்டைச்சுவரை சுற்றி அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன.இந்த பாரம்பரிய கோட்டைச்சுவரை சுற்றுலாத்துறை மூலம் ரூ.75 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடக்கிறது.
கடைகள் ஆக்கிரமிப்பால் கோட்டைச்சுவர் அழகு மறைவதாக, ஆக., 23ல் புகார் எழுந்தது. மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர். நடைபாதையில் கற்கள் பதித்து, அப்பகுதியில் புதுப்பொலிவை ஏற்படுத்தினர்.ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்காததால், மீண்டும் கோட்டை சுவர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. நடைபாதையை பூக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. மக்கள் ரோட்டில் நடந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் நடராஜன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.