/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்காலில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சுற்றிவளைப்புகாரைக்காலில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சுற்றிவளைப்பு
காரைக்காலில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சுற்றிவளைப்பு
காரைக்காலில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சுற்றிவளைப்பு
காரைக்காலில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 30, 2011 01:09 AM
காரைக்கால் : தமிழகம், புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொலைகார கும்பலில் 4 பேர் காரைக்காலில் சிக்கினர்.
இக்கும்பல் போத்தீஸில் 81 லட்சம் கொள்ளை, காஞ்சிபுரத்தில் கிருஷ்ணன் கொலை உள்ளிட்ட பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காரைக்காலில் கடந்த ஜூன் 10ம் தேதி இரவு 11 மணிக்கு கோட்டுச்சேரி தனியார் மதுபான கடை கேஷியர்கள் சண்முகம், சுந்தரராஜ் ஆகியோர் மதுபானக் கடை கலெக்ஷன் 80 ஆயிரம் ரூபாயை வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது மர்ம கும்பல் கத்தியைக் காட்டி பணத்தைப் பறித்து சென்றது. அதேமாதம் 20ம் தேதி இரவு வலத்தெரு பூபதி மற்றும் அவரது மனைவி மீனாட்சிசுந்தரம் திருமணம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காம்மலர் வீதி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மீனாட்சிசுந்தரம் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். தொடரும் இந்த வழிப்பறி கும்பலை பிடிக்க மாவட்ட சீனியர் எஸ்.பி.,ஸ்ரீகாந்த் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தார். தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு வருவது சீர்காழி தாலுகா வெள்ளப்பள்ளம் மணல்மேடு சங்கரின் கும்பல் என்பது தெரியவந்தது. இக்கும்பலை பிடிக்க காரைக்கால் போலீசார் தமிழக போலீசாருடன் இணைந்து செயல்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு திருப்பட்டினம் மகாதோப்பு வீதியைச் சேர்ந்த ராஜ், தனது மனைவி இளம்நிலவுடன் கடற்கரையில் இருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி ஒன்னரை சவரன் தங்க செயினைப் பறித்து சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், லோகநாதன் ஆகியோர் புளியங்கொட்டைசாலை, காமராஜர் வீதி சந்திப்பு அருகே நின்று கண்காணித்திருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்களிடம் தங்க செயின் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த சீர்காழி வெள்ளப்பள்ளம் பெரியதெரு மணிவேல் மகன் விஜி என்கிற வினோத், 22, இளந்தோப்பு நாகராஜ் மகன் அருண் (எ) அருணகிரி, 21, கொள்ளிடம் கடையநல்லூர் தர்மராஜ் மகன் பிரபு, 21, திருவெண்காடு நாங்கூர் இலக்கியராஜ், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இக்கும்பல் காரைக்காலில் நடந்த தொடர் செயின் பறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 6 சவரன் தங்க நகை, ரூ. 4000 ரூபா#, 3 கத்தி, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கும்பலில் உள்ள வினோத், தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. காரைக்கால் மாவட்ட சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த் கூறுகையில், காரைக்காலில் சமீபத்தில் நடந்த வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் சிக்கியுள்ளனர். அதில் பாக்கியராஜ் தலைமறைவாக உள்ளார். இக்கும்பல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தி.நகர் போத்தீஸ் கடையில் வசூல் பணம் 81 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த ஆண்டு ஜூலையில் வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் கொள்ளை அடித்துள்ளனர். வடலூரில் கடந்த ஆண்டு நகை கடையை மூடிவிட்டு வந்தவர் மீது குண்டுவீசி, துப்பாக்கியால் சுட்டு கொள்ளை, புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் கொள்ளை, காஞ்சிபுரத்தில் கிருஷ்ணன் கொலை உட்பட பல பல வழக்குகளில் இக்கும்பலுக்கு தொடர்புள்ளது. பிடிபட்ட வினோத் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சிக்கியது எப்படி: தமிழகத்தில் கொள்ளையடிக்கும் பணத் தில் தங்க நகை வாங்குவது, காரைக்கால் வந்து குடிப்பதை இக்கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது. குடிக்க வரும்போது கண்ணுக்கு உறுத்தும் விதமாக யாராவது அதிக நகை அணிந்திருந்தால் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்து வந்தனர். நேற்றுமுன்தினம் காரைக்காலில் வழிப்பறி யில் ஈடுபட்டு கிளம்பும்போது ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இந்த கும்பல் சிக்கியது. போலீசாருக்கு பாராட்டு: தமிழகத்தில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான வினோத் மற்றும் கூட்டாளிகள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த போது காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன், லோகநாதன் ஆகியோர் துணிந்து பிடித்ததை சீனியர் எஸ்.பி., ஸ்ரீகாந்த பாராட்டினார். மேலும், சுதந்திர தின விழாவில் சிறப்பு பரிசு வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்தார்.