/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காரமடையில் ரூ.1.15 கோடியில் 2 தடுப்பணைகள்காரமடையில் ரூ.1.15 கோடியில் 2 தடுப்பணைகள்
காரமடையில் ரூ.1.15 கோடியில் 2 தடுப்பணைகள்
காரமடையில் ரூ.1.15 கோடியில் 2 தடுப்பணைகள்
காரமடையில் ரூ.1.15 கோடியில் 2 தடுப்பணைகள்
ADDED : ஆக 22, 2011 10:54 PM
மேட்டுப்பாளையம் : '' காரமடை ஒன்றியத்தில் ஒரு கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 2 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.
இதனால் 400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும்,'' என, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்தார். காரமடை ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சி வடபொன்முடி, ஏழு எருமைப் பள்ளத்தில் தடுப்பணை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிசாமி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., சின்னராஜ் பணிகளை துவக்கி வைத்தார். காண்டிராக்டர் ஞானசேகரன், ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, பள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். கண்காணிப்பு பொறியாளர் பழனிசாமி கூறியதாவது: செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறியூட்டும் திட்டத்தில் காரமடை ஒன்றியத்தில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஒரு கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெள்ளாதி, ஜடையம்பாளையம், பள்ளேபாளையம் ஆகிய 3 ஊராட்சிகளின் எல்லை வடபொன்முடியில் ஏழு எருமைப்பள்ளம் உள்ளது. இங்கு 72 லட்சம் ரூபாய் செலவில் 40 மீட்டர் நீளம், 11 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டப்படுகிறது. இதனால், இப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 260க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும். ஆண்டுக்கு நான்கு முறை இத்தடுப்பணை நிறைந்தால், சுற்றியுள்ள கிணறுகளில் தண்ணீர் எப்போதும் இருக்கும். அதேபோன்று, காளம்பாளையம் ஊராட்சியில் பெரும்பள்ளத்தில் 43.60 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதனால், இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும். இவ்வாறு பொறியாளர் பழனிசாமி தெரிவித்தார். பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி வரவேற்றார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.