ADDED : ஆக 30, 2011 01:30 PM
புதுடில்லி: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், குஜராத் லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியை நியமித்த கவர்னரின் செயல் குறித்து விவாதிக்க பா.ஜ., வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து, சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


