/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.முட்லூர் அரசு கல்லூரி அட்மிஷன் அலைகழிக்கப்படும் மாணவ, மாணவிகள்சி.முட்லூர் அரசு கல்லூரி அட்மிஷன் அலைகழிக்கப்படும் மாணவ, மாணவிகள்
சி.முட்லூர் அரசு கல்லூரி அட்மிஷன் அலைகழிக்கப்படும் மாணவ, மாணவிகள்
சி.முட்லூர் அரசு கல்லூரி அட்மிஷன் அலைகழிக்கப்படும் மாணவ, மாணவிகள்
சி.முட்லூர் அரசு கல்லூரி அட்மிஷன் அலைகழிக்கப்படும் மாணவ, மாணவிகள்
ADDED : ஆக 06, 2011 02:20 AM
கிள்ளை : சி.முட்லூரில் புதிய மாணவர் சேர்க்கைக்கு உரிய விளக்கம் அளிக்காததால் மாணவர்கள் தினசரி அலைகழிக்கப்படும் நிலை தொடர்கிறது.
சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கைக்காக கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் நடந்தது.குறிப்பிட்ட மாணவர்கள் சேர்க்கையைத் தொடர்ந்து 5ம் தேதி கல்லூரி துவங்கியது. பின்னர் கடந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது.தற்போது பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், கடலூர் அரசு கலைக் கல்லூரியில் வராண்டா அட்மிஷன் முடிந்துள்ள நிலையில் இந்த கல்லூரியில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டால் கவுன்சிலிங் குறித்து அறிவிப்பு பலகையில் வெளியிடுவதாகக் கூறி அலை கழிக்கின்றனர்.எப்போது அறிவிப்பு வெளியிடுவார்கள் என தினமும் நோட்டீஸ் போர்டை பார்க்க வெளியூரில் இருந்து வந்து செல்லும் நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து முறைப்படி மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.