Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒன்றிய குழுதலைவர் அறை மூடல்: வாகனம் திரும்ப பெறப்பட்டது

ஒன்றிய குழுதலைவர் அறை மூடல்: வாகனம் திரும்ப பெறப்பட்டது

ஒன்றிய குழுதலைவர் அறை மூடல்: வாகனம் திரும்ப பெறப்பட்டது

ஒன்றிய குழுதலைவர் அறை மூடல்: வாகனம் திரும்ப பெறப்பட்டது

ADDED : செப் 23, 2011 09:59 PM


Google News
உடுமலை : உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒன்றிய குழு தலைவர் அறை பூட்டப்பட்டு; வாகனம் திரும்ப பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதும் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவு அடிப்படையில், குடிமங்கலம் ஒன்றியத்தில் புதிதாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதை தடை செய்வது உட்பட விதிமுறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய குழு தலைவர் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட டி.என்.,09 2291 எண்ணுடைய சுமோ வாகனம் திரும்ப பெறப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய குழு தலைவருக்கு வழங்கப்பட்ட அறையும் பூட்டப்பட்டுள்ளது. பிற விதிமுறை மீறல்கள் குறித்து பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவில், உள்ளாட்சி தேர்தலுக்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்கள் திரும்ப பெறப்பட்டது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

இதில், 'தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மற்ற அரசு மானியம் பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான வாகனங்களை அமைச்சரோ, எம்.பி., - எம்.எல்.ஏ., களோ, உள்ளாட்சி பிரதிநிதியோ, வேட்பாளரோ அல்லது அவரை சார்ந்தவர்களோ தேர்தலில் ஓட்டு சேகரிக்க பயன்படுத்தக்கூடாது' என்ற விதி உள்ளது. இதன்படி, ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்கள் திரும்ப பெறப்பட்டது. அதேபோல், ஒன்றியங்களில் தலைவருக்காக ஒதுக்கப்பட்ட அறைகளும் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் பணிக்காக, அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் 'தேர்தல் அவசரம்' என்ற ஸ்டிக்கரும் 'பளீச்'சென ஒட்டப்பட்டுள்ளது. ஒன்றிய, பேரூராட்சி அலுவலகங்களில், தேர்தல் பணிக்காக மட்டும் தனியாக அறை ஒதுக்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us