ADDED : ஆக 22, 2011 12:19 AM
தேனி : தேனி தொண்டு நிறுவனங்களின் வளமையம் சார்பில், தொண்டு நிறுவனங்கள்
நிதி ஆதாரம் பெருக்கும் பயிற்சி தேனியில் நடந்தது.
மாவட்ட வக்கீல் சங்க
செயலாளர் செல்வம் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். தொழில் அதிபர்
அன்னப்பராஜ், யுனைட்டடு இன்ஜினியர்ஸ் சுதாகர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி
நிர்வாக அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். வருமான வரி விலக்கு
சட்டங்கள் குறித்து, ஆடிட்டர் ஜெகதீஷ் விளக்கினார். தமிழ்நாடு தொண்டு
நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் ராஜன், நிதி ஆதாரத்தை
பெருக்கும் வழிமுறைகளை விளக்கினார். தேனி வள மையத்தின் பொது தொடர்பாளர்
பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.


