/உள்ளூர் செய்திகள்/தேனி/தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,: கூட்டணி கட்சிகள் குழப்பம்தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,: கூட்டணி கட்சிகள் குழப்பம்
தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,: கூட்டணி கட்சிகள் குழப்பம்
தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,: கூட்டணி கட்சிகள் குழப்பம்
தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,: கூட்டணி கட்சிகள் குழப்பம்
ADDED : செப் 08, 2011 10:46 PM
தேவாரம் : உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே களத்தில் குதித்துள்ள அ.தி.மு.க., வினரால் பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம், விருப்ப மனு வாங்கும் பணியில் அரசியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதால்,கட்சியினரிடையே சீட் பெறுவதில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் சீட் பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தலைவர் பதவியை குறி வைத்துள்ளவர்கள் தங்களுக்கென்று ஆதரவு கூட்டம் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். சிலர் நேரடியாக மக்களை சந்திக்க துவங்கியுள்ளனர். தனக்கு ஆதரவாக உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சென்று உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், ஜாதி சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்கின்றனர். கட்சி சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளர் அறிவிக்கும் முன்பே களத்தில் குதித்துள்ளவர்களால் கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் குழப்பத்தில் உள்ளனர்.