/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/செல்வம் கல்லூரியில் இன்றுவாள் வீச்சு இறுதிப் போட்டிசெல்வம் கல்லூரியில் இன்றுவாள் வீச்சு இறுதிப் போட்டி
செல்வம் கல்லூரியில் இன்றுவாள் வீச்சு இறுதிப் போட்டி
செல்வம் கல்லூரியில் இன்றுவாள் வீச்சு இறுதிப் போட்டி
செல்வம் கல்லூரியில் இன்றுவாள் வீச்சு இறுதிப் போட்டி
ADDED : செப் 17, 2011 01:25 AM
நாமக்கல்: நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில், இன்று மாநில
அளவிலான வாள் வீச்சுப் போட்டி நடக்க உள்ளது.நாமக்கல் செல்வம் கலை, அறிவியல்
கல்லூரி வளாகத்தில், மாநில அளவிலான வாள் வீச்சுப் போட்டி, நேற்று
முன்தினம் துவங்கியது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமை
வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயது என மூன்று
பிரிவில் மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் பிரிவில்,
172 பேரும், மாணவியர் பிரிவில், 104 மாணவியரும் போட்டியில் பங்கேற்றனர்.
இறுதி நாளான இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர், அகில
இந்திய அளவில நடக்கும் போட்டியில் பங்கேற்பர் என, போட்டி நடத்துனர்கள்
தெரிவித்தனர்.