/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாணவர்கள் பங்கேற்க அழைப்பு செப்., 29ல் வன உயிரின வார விழா போட்டிமாணவர்கள் பங்கேற்க அழைப்பு செப்., 29ல் வன உயிரின வார விழா போட்டி
மாணவர்கள் பங்கேற்க அழைப்பு செப்., 29ல் வன உயிரின வார விழா போட்டி
மாணவர்கள் பங்கேற்க அழைப்பு செப்., 29ல் வன உயிரின வார விழா போட்டி
மாணவர்கள் பங்கேற்க அழைப்பு செப்., 29ல் வன உயிரின வார விழா போட்டி
ADDED : செப் 26, 2011 11:52 PM
திருச்சி: வன உயிரின வார விழா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கு திருச்சி மாவட்ட வன அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வன அலுவலர் அன்வர்தீன் அறிக்கை: அக்டோபர் மாதம் முதல் வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையால் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டும் வன உயிரின வார விழா, திருச்சி மாவட்டத்தில் வனத்துறை சார்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட வன அளவிலான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியன செப்டம்பர் 29ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி மாணவர் வரை வனத்துறையால் நடத்தப்படும் இப்போட்டிகளில் பங்கு பெறலாம். முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்பினை பெறுவர். மேலும் விவரங்களுக்கு 94436-49768, 94421-32476 ஆகிய மொபைல்ஃபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.