/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநகராட்சி மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுமாநகராட்சி மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
மாநகராட்சி மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
மாநகராட்சி மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
மாநகராட்சி மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
ADDED : செப் 19, 2011 12:56 AM
மதுரை : பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் பெற்ற மதுரை மாநகராட்சி மாணவிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.மாணவர் கல்வித்தொகை திட்டத்தில் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10, பிளஸ் 2
தேர்வில் தரவரிசையில் இடம் பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ரூ.
10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கு 10ம் வகுப்பில், ஈ.வெ.ரா.நாகம்மையார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சவுந்தர்யா(490), வினிதா(486), பிளஸ்2 தேர்வில், காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கவிதா(1146), நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பரணி(1142), திரு.வி.க.மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா(1124), ஈ.வெ.ரா., பள்ளி மாணவி பழனியம்மாள்(1115) தேர்வாகினர். கமிஷனர் நடராஜன் பரிசுகளை வழங்குவார்.