அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.235 கோடி இழப்பு
அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.235 கோடி இழப்பு
அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.235 கோடி இழப்பு
ADDED : ஆக 19, 2011 03:55 AM

புதுடில்லி : 'இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு 235 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது' என, மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'எண்ணெய் நிறுவனங்கள் டீசலை லிட்டருக்கு ரூ.4.97, மண்ணெண்ணெயை லிட்டருக்கு ரூ.23.74, சமையல் எரிவாயுவை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.247, உற்பத்தி விலையை விட குறைவாக விற்று வருகின்றன.
பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறை கடந்த ஆண்டு ஜூனில் கைவிடப்பட்டது. அதன்பின், 21 சதவீத அளவுக்கு பெட்ரோல் விலை ஏறியுள்ளது' என்றும் ஆர்.பி.என்.சிங் கூறினார்.


