ADDED : ஜூலை 31, 2011 10:49 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, அம்பாள் வெள்ளிரத தேரோட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு பர்வதவர்த்தனி அம்பாள் சர்வ அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து, கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் ரதத்தின் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து பக்தி கோஷத்துடன் இழுத்து வர, அம்பாள் நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக கருப்புநிறத்தில் காட்சியளித்த வெள்ளிரத்தை 25 ஆண்டுகளுக்குப்பின், கோயில் நிர்வாகம் பாலிஷ் செய்து புதுப்பித்ததால், புதுப்பொழிவுடன் காட்சியளித்தது. உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், பேஷ்கார் ராதா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.