/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பெண்ணை தாக்கி, வீட்டையும் அடித்து நொறுக்கிய மூவர் கைதுபெண்ணை தாக்கி, வீட்டையும் அடித்து நொறுக்கிய மூவர் கைது
பெண்ணை தாக்கி, வீட்டையும் அடித்து நொறுக்கிய மூவர் கைது
பெண்ணை தாக்கி, வீட்டையும் அடித்து நொறுக்கிய மூவர் கைது
பெண்ணை தாக்கி, வீட்டையும் அடித்து நொறுக்கிய மூவர் கைது
ADDED : செப் 03, 2011 11:54 PM
திருநெல்வேலி : நெல்லை அருகே பெண்ணை தாக்கி வீட்டை அடித்து நொறுக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகேயுள்ள பேட்டை திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்தவர் பச்சமால். இவரது மகன் மாரிகுமார்(26). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பஸ்சில் சென்ற போது, அதே ஊரைச்சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பணி கரிசல் குளத்தை சேர்ந்த குமார்(35), இசக்கிப்பாண்டி(32), மாரியப்பன்(32) மூவரும் மாரிகுமாரின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் அவர் இல்லை. ஆத்திரமடைந்த மூவரும் மாரிகுமாரின் தாய் வள்ளியம்மாளை அடித்து உதைத்து வீட்டின் கதவு, டியூப்லைட் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து வள்ளியம்மாள் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.


