/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் வி.கே.புரம் இந்திய கம்யூ.,வேட்பாளர் வாக்குறுதிதொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் வி.கே.புரம் இந்திய கம்யூ.,வேட்பாளர் வாக்குறுதி
தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் வி.கே.புரம் இந்திய கம்யூ.,வேட்பாளர் வாக்குறுதி
தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் வி.கே.புரம் இந்திய கம்யூ.,வேட்பாளர் வாக்குறுதி
தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன் வி.கே.புரம் இந்திய கம்யூ.,வேட்பாளர் வாக்குறுதி
ADDED : அக் 08, 2011 01:13 AM
விக்கிரமசிங்கபுரம் : 'பீடித் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் காக்க பாடுபடுவேன்' என விக்கிரமசிங்கபுரம் இந்திய கம்யூ., வேட்பாளர் மார்க்ரெட் கூறினார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் மார்க்ரெட் போட்டியிடுகிறார்.
தனது கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சேர்ந்து தினமும் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வரும் இவர் தான் வெற்றி பெற்றால் நகராட்சி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூறியதாவது:பீடித் தொழிலாளர்கள் நலன் காக்க தொடர்ந்து பாடுபடுவேன். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து செயல்படுவேன். நகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதிகளில் பல்வேறு தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவுநீரையும், குப்பைகளையும் அப்புறப்படுத்தி சுகாதார நகரமாக மாற்ற முயற்சி செய்வேன்.சாலை வசதியில்லாத பகுதிகளுக்கு சாலை வசதி, தெருவிளக்குகள், புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு மின்வசதி செய்து கொடுக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்கள் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்பேன். பாபநாசம் தாமிரபரணி நதி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சி அளிக்க முயற்சி செய்வேன். நகராட்சி பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்படும்.இவ்வாறு இந்திய கம்யூ.,வேட்பாளர் மார்க்ரெட் கூறினார்.


