ADDED : ஆக 01, 2011 11:14 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பர்வதவர்த்தினி அம்பாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழா ஒன்பதாம் நாளை முன்னிட்டு, நேற்று காலை பர்வதவர்த்தனி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, காலை 10.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். அம்பாளுக்கு தீபாராதனை செய்தபின், கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுக்க, முன்னே சென்ற விநாயகர், முருகன் சிறிய தேர்களைத் தொடர்ந்து, அம்பாள் தேர் நான்குரத வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12 மணிக்கு தேர் நிலைக்கு வந்தவுடன், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.