Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்

மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்

மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்

மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் அடேங்கப்பா : களத்தில் குதித்த 12 கட்சிகள்

ADDED : செப் 30, 2011 02:07 AM


Google News

மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு 39 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

12 கட்சிகள் நேரடி களம் காண்பதால், சுயேச்சைகள் கலக்கத்தில் உள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்.,22ல் தொடங்கியது. மேயருக்கு செப்.,23 வரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. செப்.,24ல் சுயே., ஒருவரும், செப்., 26ல் ராஜன்செல்லப்பா(அ.தி.மு.க.,), மாற்றுவேட்பாளர் மகேஸ்வரி, ராசு(சுயே.,), செப்.,27ல் பாக்கியநாதன்(தி.மு.க.,), மாற்று வேட்பாளர் கவுஸ்பாட்ஷா, பாரதிகண்ணம்மா, கவியரசு (தே.மு.தி.க.,), சிக்கந்தர் பாட்ஷா, ஜெயா, செப்.,28ல் வீரபாண்டி, வெங்கடேஷ், வணங்காமுடி, வி.தவமணி, ஏ.தவமணி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.



இறுதிநாளான நேற்று 24 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். பாஸ்கரசேதுபதி(ம.தி.மு.க.,), சிலுவை (காங்.,), ராஜேந்திரன்(பா.ஜ.,), ஈஸ்வரி(ஐ.ஜே.கே.,), அன்பரசன் (புதிய தமிழகம்), பசும்பொன்(வி.சி.,), காதர் மைதீன்(ம.ம.க.,), முகைதீன்(இ.யூ.மு.லீ.,), சுயேச்சைகள் வீராச்சாமி, பெரியசாமி, செல்வகணபதி, ராமசாமி, ராஜரத்தினம், ஜெயராமன், லோகநாத், பாலகிருஷ்ணன், கலைச்செல்வி, பாண்டி, சந்திரன், செந்தமிழ் செல்வி, வேலவேந்தன், ராஜ்குமார், சுந்தரமூர்த்தி, ஆறுமுகம் என வேட்பாளர்கள் குவிந்தனர்.



'டோக்கன்' முறையில் மனுத்தாக்கல் நடந்தது. ஐந்து மாற்று வேட்பாளர்கள் தவிர, நேரடிவேட்பாளர் எண்ணிக்கை 39. பதிவு பெற்ற 12 கட்சிகளின் வேட்பாளர்களும் இதில் அடக்கம். வழக்கத்திற்கு மாறாக அதிக கட்சிகள் போட்டியிடுவதால், சுயேச்சைகள் கலக்கத்தில் உள்ளனர். சரிபார்ப்பு மற்றும் மனுவாபஸ் பெற்ற பின், 16க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டு ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும்.



சுயே.,க்கு ரூ.12 கோடி: மேயர் வேட்பாளர்களில் வேலவேந்தனுக்கு(சுயே.,) அதிகபட்சமாக 12 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து உள்ளது. மலேசியாவில் பணியாற்றிய இவர், தற்போது மதுரையில் பால்பண்ணை வைத்துள்ளார்.



முன்மொழிய மனைவி இல்லையே:

*தி.மு.க., வேட்பாளர்

பாக்கியநாதன், நேற்று மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தார்.

*இ.யூ.மு.லீ., வேட்பாளர் முகைதீன், மனுகொடுத்த பின், போட்டோ எடுப்பதற்காக தேர்தல் அலுவலர் நடராஜனிடம் 'போஸ்' கொடுக்குமாறு கேட்டார். அவர் மறுத்ததால், 'நாங்க சிறுபான்மை கட்சி, கொஞ்சம் பார்த்து செய்யுங்க சார்...' என, அவர் கூறியதும், தேர்தல்

அலுவலர் சிரித்தபடி 'போஸ்' கொடுத்தார்.

*ம.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கர சேதுபதி ஆறு பேருடன் வந்து விதிமீறலை அனுமதிக்க அடம்பிடித்தார். 'ஒருவர் வெளியேறினால் மட்டுமே மனுவை வாங்குவேன்,' என, கமிஷனர் கறாராக கூறியதால், நீண்ட போராட்டத்திற்கு பின் ஒருவர் வெளியேறினார்.

*சுயே., வேட்பாளர் செல்வகணபதிக்கு முன்மொழிய யாரும் வராததால், ஆள்

தேடி வெளியேறினார். சிறிது நேரம் கழித்து மனுத்தாக்கல் செய்தார்.

*சுயே., வேட்பாளர் ராமசாமி வந்ததும் மின்தடை ஏற்பட்டதால், 'பேட்டரி லைட்' வெளிச்சத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

*காங்., வேட்பாளர் சிலுவையுடன் ஐந்து பேர் வந்தனர். முன்மொழிபவர் வெளியில் நின்ற விபரம் தாமதமாக தெரிந்தது. உடன் வந்த ஒருவர் வெளியேற்றப்பட்டு, முன்மொழிபவர் வரவழைக்கப்பட்டார்.

*காங்., வேட்பாளரை முன்கூட்டியே அனுமதித்ததாக, சுயே., வேட்பாளர் ஒருவருடன் வந்த ராஜமாணிக்கம் என்பவர், பா.ஜ.,வினருடன் சேர்ந்து கூச்சலிட்டார். 'நான் நெனச்சா இப்பவே கலெக்டர, இங்கே வரவைப்பேன் பாக்குறீயா...,' என, தன் பாக்கெட்டில் இருந்த 'இந்திய தேசிய மக்கள் சமூக சேவா சங்கம்' அடையாள அட்டையை தூக்கி காட்டினார்.

*தனி ஆளாக வந்தார் சுயே., வேட்பாளர் லோக்நாத். முன்மொழிவதாக கூறியிருந்த

அவரது மனைவியும் உடன் வரவில்லை.

*தே.மு.தி.க., வேட்பாளருக்கு முன்மொழிவு விண்ணப்பம் கொண்டு வந்தவர்கள்,

தேர்தல் பணியாளர்களிடம் பரிசீலிக்க கூறினர். 'எங்க

ஆளுங்களை நீங்க வேலை ஏவ வேண்டாம்; அது எங்களுக்கு தெரியும்,' என, தேர்தல்

அலுவலர் கடிந்தார்.

*முன்மொழிய மனைவி பெயர் போட்டிருந்தும், சுயே., வேட்பாளர் பாலகிருஷ்ணனுடன் அவர் வரவில்லை. தேர்தல் அலுவலர் கேட்ட போது, 'அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது, அதான் போயிட்டா,' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us