Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி வாசகர் வட்டத்தில் திலகரின் 155வது பிறந்த நாள்

புதுச்சேரி வாசகர் வட்டத்தில் திலகரின் 155வது பிறந்த நாள்

புதுச்சேரி வாசகர் வட்டத்தில் திலகரின் 155வது பிறந்த நாள்

புதுச்சேரி வாசகர் வட்டத்தில் திலகரின் 155வது பிறந்த நாள்

ADDED : ஜூலை 25, 2011 12:04 AM


Google News

புதுச்சேரி : புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் 155வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி புஸ்தக் மந்திரில் நடந்த விழாவில் திலகரின் உருவப் படத்திற்கு வாசகர் வட்ட தலைவர் கலைமாமணி சுந்தரலட்சுமி நாராயணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். வாசகர் வட்ட செயலர் பேராசிரியர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு திலகரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வாசகர் வட்ட துணைத் தலைவர் பொறியாளர் சிவராஜ், பேராசிரியர் மார்டின் செல்வராஜ், விஜயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us