Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி

பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி

பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி

பணம் பறிக்க முயன்ற ஜோதிடருக்கு தர்ம அடி

ADDED : ஜூலை 28, 2011 01:02 AM


Google News

திருப்பூர் : 'வாகன விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்பிருக்கிறது; பரிகாரம் செய்ய வேண்டும்,' எனக்கூறி வாலிபரை ஏமாற்ற முயற்சித்த ஜோதிடரை, பொதுமக்கள் பிடித்து 'தர்ம அடி' கொடுத்ததால், திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய் (19).

கடந்த வாரம் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்தபோது, ஒருவர் வந்து தன்னை கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த ஜோதிடர் அருண்குமார் (22) எனவும், நீங்கள் பைக் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என கூறி, நம்ப வைத்துள்ளார். இதற்கு பரிகாரம் செய்ய 2,700 ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார். இதை கேட்டு அஞ்சிய விஜயும், 1,700 ரூபாயை கொடுத்து, பரிகாரம் செய்யுமாறு கூறியுள்ளார்.



நேற்று மீண்டும் திருப்பூர் குமரன் சிலை அருகே வந்த ஜோதிடர், விஜயை போனில் அழைத்துள்ளார். அங்கு வந்த விஜயிடம், ''ஆனைமலை கோவிலில் உங்களுக்கு பூஜை செய்தபோது, ஐந்தில் ஒரு விளக்கு அணைந்து விட்டது; உயிர் பலியை தடுக்க முடியாது; சிறப்பு பூஜை மற்றும் எந்திரம் உருவாக்க வேண்டும்; அதற்கு 5,000 ரூபாய் செலவாகும்,'' என எச்சரித்துள்ளார். அப்போது, சுதாகரித்துக் கொண்ட விஜய்; '' பரிகாரம் வேண்டாம், நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு,'' என கூறியுள்ளார். இதனால்,இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் ஜோதிடருக்கு தர்ம அடி கொடுத்து சிறை வைத்தனர். உடனே, ஜோதிடர் அருண்குமார், தனது நண்பரை அழைத்து அவரிடமிருந்து 1,600 ரூபாயை பெற்று விஜயிடம் கொடுத்தார். இதையடுத்து, ஜோதிடரை மக்கள் விடுவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us