/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/துப்பாக்குடியில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சிதுப்பாக்குடியில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
துப்பாக்குடியில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
துப்பாக்குடியில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
துப்பாக்குடியில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி
ADDED : ஆக 09, 2011 02:24 AM
ஆழ்வார்குறிச்சி : துப்பாக்குடியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் சிறப்பு பயிற்சி நடந்தது.விவசாயிகள் தாங்களாவே மண்புழு பயன்படுத்தி உரம் தயாரித்து விவசாயத்தில் பயன்படுத்தலாம் என்பதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை நெல்லை மாவட்டம் கடையம் வேளாண்மை அலுவலகம் சார்பில் சிறப்பு பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
துப்பாக்குடி பஞ்., அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் தலைமை வகித்தார்.மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அழகிரிசாமி, துப்பாக்குடி பஞ்., தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தார். ஆழ்வார்குறிச்சி துணை வேளாண்மை அலுவலர் தவசிஆசாரி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார். முகாமில் மண்புழு உரம் தயாரிப்பது பற்றி சிறப்பு பயிற்சி செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட்டது. பாப்பான்குளம் உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துசிதம்பரநாதன், கருப்பசாமி செய்திருந்தனர்.


