Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/யூனியன் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சலிங்

யூனியன் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சலிங்

யூனியன் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சலிங்

யூனியன் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சலிங்

ADDED : செப் 19, 2011 01:18 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழி தேவி தலைமையில் ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

ஈரோடு மாவட்டம் 14 யூனியன்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்தியூர் யூனியன் கோவிலூர், சேத்துனாம்பாளையம், செல்லம்பாளையம், கூத்தம்பூண்டி ஆகிய பள்ளிகள், சத்தி யூனியனில் அரசூர், நஞ்சப்பகவுண்டன்புதூர், கொமராபாளையம், நம்பியூர் யூனியனில் இடுகனூர், பாரதிபுரம், பெருந்தலையூர் ஆகிய பள்ளிகளில், ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது.அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம், அந்தியூரில் சந்திபாளையம், கோவிலூர், செல்லம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், கரட்டூர், சத்தி யூனியனில் கானிக்குளம், நஞ்சப்பகவுண்டன்புதூர், கொண்டப்பநாயக்கன்பாளையம், அம்மாபேட்டை யூனியனில் அலங்காரியூர், ஊமாரெட்டியூர், கோபி யூனியனில் மணியக்காரன்புதூர், கூகலூரும், தாளவாடி யூனியனில் கேர்மாளம், கோட்டமாளம், காதட்டி, குன்னன்மரமும், மொடக்குறிச்சி யூனியனில் விளக்கேத்தி, புதுவலசு, பவானி யூனியனில் பவானி பள்ளிகளில் காலியாக இருந்தது.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடம், பவானிசாகர் யூனியனில் காரப்பாடி, மாரனூர், புங்கம்பள்ளி, கொத்தமங்கலம், அம்மாபேட்டை யூனியனில் சித்தார், கல்பாவி, குந்துபாயூர், டி.என்.பாளையம் யூனியனில் கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், நம்பியூர் யூனியனில் ஒட்டர்கரட்டுப்பாளையம், காந்திபுரம், கொமராபாளையம், கோபி யூனியனில் பெரிய கொரவம்பாளையம், கவுண்டம்பாளையம், ஒளவையார்பாளையம், ஈரோடு யூனியனில் சின்னசேமூர், திருநகர் காலனி, மொடக்குறிச்சி யூனியனில் காகம், சேனாபதிபாளையம், நாதகவுண்டன்பாளையம் மற்றும் பூந்துரை சேமூர்.தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் பிரிவில் பெருந்துறை யூனியனில் பெருந்துறை கிழக்கு, அந்தியூர் யூனியனில் கரட்டூர், புதுக்காடு, காந்திநகர் ஆகிய பள்ளிகள்.கணிதப்பாட பிரிவில் அந்தியூர் யூனியனில் சிந்தகவுண்டன்பாளையம், சேத்துனாம்பாளையம், அம்மாபேட்டை யூனியனில் அலங்காரியூர், தாளவாடி யூனியனில் தாளவாடி, குன்னன்புரம் பள்ளிகள்.வரலாறு பட்டதாரி ஆசிரியர்களில் கொடுமுடி யூனியனில் மலையம்பாளையம், அம்மாபேட்டை யூனியனில் ஊமாரெட்டியூர் ஆகிய பள்ளிகள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டது. கலந்தாய்வு கூட்டத்தில் மொத்தம் 29 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 12 பேருக்கு மாறுதல் ஆணையும், 22 பேருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us