3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை
3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை
3 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதி நியமனம்: கொலிஜியம் பரிந்துரை
ADDED : செப் 11, 2025 08:02 PM

புதுடில்லி: 3 மாநில ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில், தற்போது பாட்னா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் பவன்குமார் பஜன்திரியை அதே நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்
கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமியா சென்-ஐ, மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும்
சென்னை ஐகோர்ட் நீதிபதி எம். சுந்தரை, மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.