Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/போட்டி தேர்வுகளில் சாதிக்க நாளிதழ் படியுங்கள் :குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர் அட்வைஸ்

போட்டி தேர்வுகளில் சாதிக்க நாளிதழ் படியுங்கள் :குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர் அட்வைஸ்

போட்டி தேர்வுகளில் சாதிக்க நாளிதழ் படியுங்கள் :குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர் அட்வைஸ்

போட்டி தேர்வுகளில் சாதிக்க நாளிதழ் படியுங்கள் :குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர் அட்வைஸ்

ADDED : ஆக 24, 2011 12:08 AM


Google News

விழுப்புரம் : விழுப்புரத்தைச் சேர்ந்தவர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

விழுப்புரம், மஞ்சு நகரில் வசிக்கும் விஸ்வநாதன் மகன் சரவணக்குமார். கடந்த 2001ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் தேர்வாகி, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையில் உதவியாளராக பணிபுரிகிறார். தற்போது நடந்த குரூப் 1 தேர்விலும் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள சப் - கலெக்டர், டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், துணை பதிவாளர் உள்ளிட்ட, 61 பணியிடங்களுக்கு கடந்தாண்டு மே மாதம் குரூப் 1 தேர்வு நடந்தது. இதில் 423.5 மதிப்பெண்கள் பெற்று, சரவணக்குமார் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.



இது குறித்து சரவணக்குமார் கூறியதாவது: 'கடந்தாண்டு நடந்த குரூப் 1 தேர்வில், தமிழக அளவில், 12வது இடத்தில் (தர வரிசை) தேர்வாகியுள்ளேன். மொத்தமுள்ள 8 டி.எஸ்.பி., இடங்களில் விழுப்புரத்தைச் சேர்ந்த எனக்கும் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் நிலைத் தேர்வுகள் முடிந்து, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், உடல் தகுதி தேர்வுகள் முடிந்து, பணி வாய்ப்பு வந்துள்ளது. இந்த தேர்வுக்காக, சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால், அனைவரும் தேர்வில் சாதிக்கலாம். போட்டித் தேர்வுகளில் சாதிக்க, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பாட புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்ள நாளிதழ்களை தினசரி படித்தால், தேர்வில் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இவ்வாறு சரவணக்குமார் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us