தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்
தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்
தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்
ADDED : ஜூன் 23, 2024 03:15 PM

சென்னை: ரஷ்யாவிற்கு ஆட்கடத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு எதிராக சி.பி.ஐ., ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.
சுற்றுலா, வேலைக்காக ரஷ்யாவிற்கு சென்ற இந்தியர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக இடைத்தரகர்கள் 3.5 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு இந்தியர்களை ரஷ்யாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது.
விசா கன்சல்டன்சி நிறுவனங்கள், முகவர்கள் மூலம் மோசடி நடந்துள்ளதையும், இந்த நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இளைஞர்களை மோசடி செய்ததாகவும் தெரிவித்து உள்ளது. அந்த இளைஞர்களிடம் நல்ல வேலை, நல்ல சம்பளம், எனக்கூறியதுடன், சுற்றுலா விசாவில் உல்லாச சுற்றுலா எனக்கூறி கடத்தி உள்ளனர்.
இந்த விவகாரத்தில், டில்லி, அம்பாலா, சண்டிகர், சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக சி.பி.ஐ., ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.