ADDED : செப் 29, 2011 10:16 PM
கோவை : ''காந்தி ஜெயந்தி முன்னிட்டு வரும் அக்., 2ல் அனைத்து இறைச்சி
கடைகளும் மூடப்பட வேண்டும், '' என, மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி
உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தி
ஜெயந்தி வரும் அக்.,2ல் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும்
கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும், அரசால் தடை
செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி
மற்றும் பன்றி இறைச்சி விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும். உக்கடம்,
சிங்காநல்லூர், சத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சியால்
நடத்தப்படும் ஆடு இறைச்சி விற்பனை கடைகள் செயல்படாது. உத்தரவை மீறி அன்றைய
தினம் இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகளால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.