பயணிகள் கப்பலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
பயணிகள் கப்பலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
பயணிகள் கப்பலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2011 11:33 PM
தூத்துக்குடி : கொழும்புவிற்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை நிறுத்தக்கோரி, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தால், தோணியில் சரக்கு கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டுப் போரில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இது தேவையற்றது என, அதன் எதிர்ப்பாளர்கள் கூறிவருகின்றனர். கப்பல் போக்குவரத்தை நிறுத்தக்கோரி அந்த அமைப்பு சார்பில், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக நுழைவாயில் அருகில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலோர மக்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் ஜான்சன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் புஷ்பராயன், இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலர் மோகன் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.