ADDED : செப் 21, 2011 11:28 PM
விருதுநகர் : பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில், 91 பேருக்கு வங்கி கடன் வழங்க தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.வேலை உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்படும். 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், பெண்கள், மாற்று திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொது பிரிவினர் சொந்த முதலீடாக 10 சதவீதம், மற்றவர்கள் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.
திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பித்தவர்கள் 131 பேருக்கு நேர் முகத்தேர்வு தேர்வுக்குழு முன்பாக நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.சாந்தக்குமார், முன்னோடி வங்கி மேலாளர் சுகுமாறன், தாட்கோ மேலாளர் எஸ்.பாக்கியராஜ், சிறு, குறு தொழில்கள் அமைப்பின் தலைவர் பிருந்தாவன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஏ.எச்.சுதீந்திரா பங்கு பெற்றனர். 91 நபர்களுக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. 6 பேருக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டது.