/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"கல்வி உதவித் தொகை பெற விதிமுறைகள் தளர்த்த வேண்டும்'"கல்வி உதவித் தொகை பெற விதிமுறைகள் தளர்த்த வேண்டும்'
"கல்வி உதவித் தொகை பெற விதிமுறைகள் தளர்த்த வேண்டும்'
"கல்வி உதவித் தொகை பெற விதிமுறைகள் தளர்த்த வேண்டும்'
"கல்வி உதவித் தொகை பெற விதிமுறைகள் தளர்த்த வேண்டும்'
ADDED : செப் 03, 2011 02:39 AM
குற்றாலம்:'பீடித் தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற பாங்க்
கணக்கு தொடங்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்த வேண்டும்' என கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.பீடித் தொழிலாளர்கள் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற
பாங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள்
வற்புறுத்தப்படுவதால் பலர் கல்விஉதவித் தொகை பெற முடியாத சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் லட்சக்கணக்கான பீடி சுற்றும்
தொழிலாளர்கள் உள்ளனர். பலருக்கு வாழ்வாதாரமாக பீடி சுற்றும் தொழில் விளங்கி
வருகிறது. இத்தொழிலில் ஈடுபடுவோர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு
நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.பீடி சுற்றும்
தொழிலாளர்கள் உடல்நலத்தை காக்க ஆஸ்பத்திரி பென்ஷன் மற்றும் கல்வி பயிலும்
பீடித் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு
திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள்
செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால் பீடித் தொழிலாளர்கள் வாழ்க்கை
தரம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கல்வி உதவித் தொகை திட்டத்தினால்
ஏராளமான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
6, 7 மற்றும் 8வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 700
ரூபாயும், 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 1400 ரூபாயும்,
11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அரசு
வழங்கி வருகிறது. மாணவிகளுக்கு இத்தொகையில் இருந்து கூடுதலாக 400 ரூபாய்
வழங்கப்படுகிறது.
தென்காசியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுமார் 500 மாணவர்களுக்கு
ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
இதுபோல் பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வரும்
வேளையில் இந்த ஆண்டு அரசு புதிய முறை அமல்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு வரை
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு மொத்த ரூபாக்கும் காசோலை
வழங்கப்படும். அதை அவர் மாற்றி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவார். ஆனால் இந்த
ஆண்டு மாணவ, மாணவிகள் இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் கணக்கு துவங்கி அந்த
நம்பரை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்புமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாங்கில் ஏற்கனவே கணக்கு
வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க பணம் போட பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய
நிலை உள்ளது.
மேலும் பெரும்பாலான பாங்குகளில் போதிய அலுவலர்கள் இல்லாததால்
வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே
கல்வி உதவித் தொகைபெற மாணவ, மாணவிகளுக்கு பாங்க் கணக்கு தொடங்க காலதாமதம்
ஏற்படுகிறது.
பல பாங்க்குகளில் புதிய கணக்கு தொடங்க மறுத்து விடுகின்றனர் என புகார்
எழுந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் அலைக்கழிக்கப்பட்டு
வருகின்றனர். எனவே மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் நலன் கருதி இந்த ஆண்டு
கல்வி உதவித் தொகையை கடந்த ஆண்டு வழங்கியதை போல வழங்க ஏற்பாடு செய்ய
வேண்டும் என மாணவ, மாணவிகள் விரும்புகின்றனர்.