ஜெர்மனியில் கூட்டத்தில் புகுந்த கார்: குழந்தைகள் 15 பேர் காயம்!
ஜெர்மனியில் கூட்டத்தில் புகுந்த கார்: குழந்தைகள் 15 பேர் காயம்!
ஜெர்மனியில் கூட்டத்தில் புகுந்த கார்: குழந்தைகள் 15 பேர் காயம்!
ADDED : செப் 04, 2025 06:42 PM

பெர்லின்: பெர்லினில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்த சம்பவத்தில், 15 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
ஜெர்மனியின் பெர்லினில் சாலை ஓரத்தில் மக்கள் நடந்து சென்ற கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. கார் மோதியதில் 15 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்துக்கு காரணமான காரின் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். காயமடைந்த 15 குழந்தைகளில் மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.