Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தொரப்பள்ளி பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி

தொரப்பள்ளி பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி

தொரப்பள்ளி பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி

தொரப்பள்ளி பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி

ADDED : ஜூலை 24, 2011 02:45 AM


Google News

கூடலூர் : கூடலூர் தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

கூடலூர் தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.

முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்களின் உடல், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க யோகா பயில்வது மிகவும் அவசியமாகும். மாறுபட்ட குடும்ப சூழலிருந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதில், யோகா கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது,'' என்றார். உடற்கல்வி ஆசிரியர் லிங்கராஜ் மாணவர்களுக்கு யோகா கல்வி குறித்து பயிற்சி அளித்தார். முகாமில் ஆசிரியர்கள் கலாவதி, ஜூலியட் ரேகா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us