ADDED : ஆக 21, 2011 01:51 AM
சிவகாசி : சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில், தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் அசன் பதுரூதீன், சரவணக்குமார், ஜெ. பேரவை இணைச்செயலாளர் திருமுருகன், ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கட்சி பேச்சாளர் கூடல் மதன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி, தொகுதி செயலாளர் சிவக்குமார், இணைசெயலாளர்கள் மாரியப்பன், முனியாண்டி, ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், பேரவை மாவட்ட துணை செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி உள்பட பலர் பேசினர்.