/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கூட்டுறவு பட்டய பயிற்சியில் 24க்குள் சேர வேண்டுகோள்கூட்டுறவு பட்டய பயிற்சியில் 24க்குள் சேர வேண்டுகோள்
கூட்டுறவு பட்டய பயிற்சியில் 24க்குள் சேர வேண்டுகோள்
கூட்டுறவு பட்டய பயிற்சியில் 24க்குள் சேர வேண்டுகோள்
கூட்டுறவு பட்டய பயிற்சியில் 24க்குள் சேர வேண்டுகோள்
ADDED : செப் 05, 2011 11:56 PM
தர்மபுரி : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கூட்டுறவுத் துறை நடத்தும் பட்டய பயிற்சியில், வரும் 24ம் தேதிக்குள் சேர்ந்து பயனடையுமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வேளாண்மை சங்கங்கள், விற்பனை சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் உள்பட பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பல பணியாளர்கள் இப்பயிற்சியை இன்னும் பெறாமல் உள்ளனர். அவர்கள், உடனடியாக இப் பயிற்சியை முடிக்க வேண்டும் என, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பணியாளர்கள் பயிற்சியை முடிக்கும் வகையில், தர்மபுரி அடுத்த மொரப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியை முடித்த பணியாளர்களுக்கு, கூட்டுறவு பட்டயம், கம்ப்யூட்டர் பட்டயம் மற்றும் நகை மதிப்பீடுநர் பட்டயம் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே நடக்கிறது. கட்டணமாக, 7,960 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கல்வித் தகுதி, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தர்மபுரி, கிருஷ்ணகரி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களும், சங்க தீர்மான நகலுடன் வந்து பயிற்சியில் சேர்ந்துகொள்ளலாம். இப் பயிற்சியில் சேர, 24ம் தேதி இறுதிநாளாகும். பயிற்சி வகுப்புகள், வரும் 25ம் தேதி முதல் துவக்கப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், மொரப்பூர் என்ற முகவரிக்கோ அல்லது 04346-263529, 98651-12646 என்ற ஃபோன் எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என கூட்டுறவுத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.