/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வங்கதேசம் ஒப்பந்தத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் : ரத்து செய்ய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம்வங்கதேசம் ஒப்பந்தத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் : ரத்து செய்ய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம்
வங்கதேசம் ஒப்பந்தத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் : ரத்து செய்ய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம்
வங்கதேசம் ஒப்பந்தத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் : ரத்து செய்ய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம்
வங்கதேசம் ஒப்பந்தத்தால் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கும் : ரத்து செய்ய ஜவுளித்துறை அமைச்சருக்கு கடிதம்
ADDED : செப் 21, 2011 01:23 AM
ஈரோடு : வங்கதேசத்துடன் ஏற்பட்ட ஜவுளி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
என, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த சர்மாவுக்கு, ஈரோடு அனைத்து வணிகர்
சங்கம் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில்
அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில், 335 லட்சம் பேல் பருத்தி
உற்பத்தியாகிறது. இதில், 255 லட்சம் பேல் உள்நாட்டு உற்பத்திக்கு
பயன்படுகிறது. மீதமுள்ள 80 லட்சம் பேல் ஏற்றுமதிக்கு உகந்தது என்ற
அறிவிப்பு, அடுத்து வரும் பருவத்தில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
பருவநிலை வேறுபாட்டால், பருத்தி உற்பத்தி குறைய நேரிடும். ஏற்றுமதியால்
உள்நாட்டில் பாதிப்பு ஏற்படும். எனவே, அரசு தேவையான பருத்தியை இருப்பு
வைப்பதே ஏற்புடையதாக அமையும். தெற்காசிய நாடுகளில் வரி இல்லா வர்த்தக
ஒப்பந்தத்தின் படி, தற்போது, 61 பொருட்கள் வங்கதேசத்தில் இருந்து எவ்வித
வரியும் இல்லாமல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யலாம் என ஒப்பந்தம்
நிறைவேறியுள்ளது. அதில், 46 பொருள்கள் ஜவுளி சார்ந்த பொருள்கள் என
குறிப்பிட்டிருப்பது, இந்திய ஜவுளி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொருட்களை எந்தவித கோட்டாவும் இல்லாமல், எவ்வளவு வேண்டுமானாலும்
அனுப்பலாம். இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஆயத்த
ஆடைகள் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும். இந்தியா - வங்கதேசம் இடையே ஒரே
பொருளின் விலையில் குறைந்தபட்சம் 20 சதவீதம் வித்தியாசம் ஏற்படும்.
இந்தியாவில் 8.8 சதவீதம் இருந்த 'டியூட்டி டிராபேக்' 7.5 சதவீதமாக
குறைந்துள்ள நிலையில், ஏற்றுமதியில் போட்டியிட முடியாது. இந்திய ஜவுளி
உற்பத்தியாளர்கள் நூலுக்கு ஐந்து சதவீதம் மதிப்பு கூட்டு வரியும், 10
சதவீதம் கலால் வரியும் செலுத்தி உள்நாட்டில் விற்கும் நிலை உள்ளது.
வங்கதேசத்தில் இருந்து வரும் ஜவுளிக்கு குறைந்தபட்சம் 20 சதவீதம் இறக்குமதி
தீர்வை விதிக்கவேண்டும். இந்திய அரசு ஜவுளி தொழிலை தொடர்ந்து அலட்சியம்
காட்டும் பட்சத்தில், ஜவுளித்தொழில் இந்திய வரைபடத்தில் இருந்து
நீக்கப்பட்டு விடும் என்பதே உண்மை. எனவே, பாதிப்பை உள்ளாக்கும் இந்த
ஒப்பந்தத்தை உடனே நீக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.