மாநகராட்சி அதிகாரி மீது கோப்புகளை வீசி எறிந்த பெண் மேயர்
மாநகராட்சி அதிகாரி மீது கோப்புகளை வீசி எறிந்த பெண் மேயர்
மாநகராட்சி அதிகாரி மீது கோப்புகளை வீசி எறிந்த பெண் மேயர்
ADDED : ஜூன் 14, 2024 08:58 PM

லக்னோ: உ.பி.,யில் கான்பூர் மாநகராட்சி ஆய்வு கூட்டத்தின் போது அதிகாரி மீது கோப்புகளை பெண் மேயர் வீசி எறிந்த சம்பவம் நடந்துள்ளது.
உ.பி.மாநிலம் கான்பூர் மாநகராட்சி ஆய்வு கூட்டம் மாநகராட்சி மேயர் பிரமீளா பாண்டே தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் குறித்து மேயர் கேட்டறிந்தார்.
இதில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக ஆய்வு நடந்த கூட்டத்தின் போது புகார் கூறப்பட்டது. புகாரை மறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரி மேயரிடம் தவறான தகவலை தெரிவித்தார்.
அவரது விளக்கம் திருப்தியில்லாததால் ஆத்திரமடைந்த மேயர் பிரமீளா பாண்டே , தன் மேசை மீது இருந்த கோப்பினை அதிகாரி மீது வீசி எறிந்து திட்டினார். இதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.