/உள்ளூர் செய்திகள்/தேனி/கால்நடை டாக்டர் இல்லை கால்நடைகள் பாதிப்புகால்நடை டாக்டர் இல்லை கால்நடைகள் பாதிப்பு
கால்நடை டாக்டர் இல்லை கால்நடைகள் பாதிப்பு
கால்நடை டாக்டர் இல்லை கால்நடைகள் பாதிப்பு
கால்நடை டாக்டர் இல்லை கால்நடைகள் பாதிப்பு
ADDED : செப் 21, 2011 11:05 PM
தேவாரம் : தேவாரம் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியிடம் காலியாக இருப்பதால் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தேவாரம், அரசு கால்நடை ஆஸ்பத்திரி, சிறிய வாடகை கட்டடத்தில் இயங்குகிறது.
தேவாரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர். டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. வெளியூர் டாக்டர்கள் கூடுதல் பொறுப்பாக தேவாரத்தையும் கவனிக்கின்றனர். விவசாயி மகாலிங்கம் கூறுகையில், 'கடந்த ஆறு மாதங்களாக டாக்டர் நியமிக்கவில்லை. கால்நடை களுக்கு அவசர சிகிச்சையளிக்க முடியவில்லை. மாடுகளை தாக்கும் தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள் பற்றிய விபரம் தெரியவில்லை. டாக்டர் நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றார்'.