தபால் நிலையங்களில் அரசு விண்ணப்பங்கள்
தபால் நிலையங்களில் அரசு விண்ணப்பங்கள்
தபால் நிலையங்களில் அரசு விண்ணப்பங்கள்
ADDED : ஆக 05, 2011 10:43 PM
சென்னை: அரசின் அனைத்து துறை விண்ணப்பப் படிவங்களையும், ஆக., 15 முதல் தபால் நிலையங்களிலேயே பெறும் புதிய திட்டத்தை, தபால் துறையின் தமிழக வட்டம் அறிமுகப்படுத்துகிறது.
இந்திய அஞ்சல் துறை, தபால் போக்குவரத்துகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. பொதுத் துறை நிறுவனமான இத்துறை, தபால் வினியோகம், தபால் தலைகள், கடித உறை விற்பனை உள்ளிட்ட பராம்பரிய பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய, வருவாய் ஈட்டும் பல புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.