/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோவில் பிரச்னையால் மோதல் அபாயம் : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்புகோவில் பிரச்னையால் மோதல் அபாயம் : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
கோவில் பிரச்னையால் மோதல் அபாயம் : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
கோவில் பிரச்னையால் மோதல் அபாயம் : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
கோவில் பிரச்னையால் மோதல் அபாயம் : அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு
ராசிபுரம் : ராசிபுரம் அருகே கோவில் பிரச்னை தொடர்பாக இரு சமூக பிரிவினரிடையே மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. அது சம்மந்தமாக, நாமக்கல் ஆர்.டி.ஓ., விடம் புகார் அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., தலைமையில் இரு தரப்பினரிடமும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், பத்துக்கு பத்து என்ற அளவில் விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சமூகப்பிரிவினர் 'இந்த இடம் எங்களுக்கு போதாது, அதிக நிலம் வேண்டும்' என்று, போக்கொடி தூக்கினார். இடம் ஒதுக்காவிட்டால் அங்குள்ள விநாயகர் கோவிலில் நுழைந்து பாலாபிஷேகம் செய்வோம் என, துண்டு பிரசுரம் விநியோகிகப்பட்டது. அதனால், அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
தகவலறிந்த ராசிபுரம் டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வன், தாசில்தார் சத்தியநாராயணன், இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.