Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ

சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ

சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ

சூட்டிங் ஸ்பாட்டில் மனைவியுடன் காணாமல் போன ஹீரோ

UPDATED : ஆக 15, 2011 12:36 PMADDED : ஆக 15, 2011 12:28 PM


Google News
ஊட்டி : டி.வி., நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி விஜய் டி.வி.,யில் ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரஜின்.

இப்போது சுற்றுலா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்பபடத்தின் சூட்டிங் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாகவே நடந்து வருகிறது. சூட்டிங்கிற்கு நடிகர் பிரஜன் தனது மனைவி சான்ட்ரா வந்திருந்தார். இந்நிலையில் வழக்கமாக இன்று சூட்டிங் தொடங்க இருந்தபோது நடிகர் பிரஜனும், அவரது மனைவியும் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து படத்தின் தயாரிப்பு மேலாளர் பாரதி, குன்னூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் பிரஜனும், அவரது மனைவியும் காணாமல் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us