ADDED : செப் 08, 2011 10:46 PM
தேனி : மாவட்டத்தில் முதன் முறையாக மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றம், நாளை முதல் செயல்பட உள்ளது.
நாடு முழுவதும் 2,500 மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றங்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்டத்திற்கான மாஜிஸ்திரேட் விரைவு நீதிமன்றம் திறப்பு விழா நாளை நடக்கிறது. மதுரை ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், கலெக்டர், எஸ்.பி., பங்கேற்கின்றனர். செக் மோசடி உட்பட பொருளாதார குற்ற வழக்குகள் இந்நீதிமன்றம் விசாரிக்கும். தொடக்க விழா அன்றே விரைவு கோர்ட் செயல்பட தொடங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.