ஏர்போர்ட் பாதுகாப்பில் அதிரடிப்படை இணைப்பு
ஏர்போர்ட் பாதுகாப்பில் அதிரடிப்படை இணைப்பு
ஏர்போர்ட் பாதுகாப்பில் அதிரடிப்படை இணைப்பு
ADDED : செப் 11, 2011 12:44 AM
திரிசூலம் : டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அனுப்பிய எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில், 'குயிக் ரியாக்ஷன் போர்ஸ்' எனப்படும் அதிரடிப் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
டில்லி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு, நேற்று அதிகரிக்கப்பட்டது. விமான நிலையத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களும், இரண்டு கட்ட சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.கார் பார்க்கிங், பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களின் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு, வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகள், பலத்த சோதனைக்குப் பின்னரே விமானத்தில் ஏற்றப்படுகின்றன. பயணிகள் மற்றும் பார்வையாளர்களும், பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். வெளி வளாக பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், எந்தவிதமான பயங்கரவாத தாக்குதலையும் சமாளிக்கும் திறன் பெற்ற, 'குயிக் ரியாக் ஷன் போர்ஸ் (கியூ.ஆர்.எப்.,)' எனப்படும் அதிரடிப் படையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ஷிப்ட் என்ற முறையில், மொத்தம் 16 அதிரடிப் படையினர் தற்போது, விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.