எதிர்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி: உரிய நேரத்தில் உரிய முடிவு: மல்லிகார்ஜூன கார்கே
எதிர்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி: உரிய நேரத்தில் உரிய முடிவு: மல்லிகார்ஜூன கார்கே
எதிர்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி: உரிய நேரத்தில் உரிய முடிவு: மல்லிகார்ஜூன கார்கே
UPDATED : ஜூன் 05, 2024 09:21 PM
ADDED : ஜூன் 05, 2024 09:15 PM

புதுடில்லி: எதிர்கட்சி வரிசையில் அமர்வதா, இல்லையா என்பது குறித்து இண்டியா கூட்டணி உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கும் என மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு பின் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது, உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி. மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். தேர்தல் முடிவு பா.ஜ.,வுக்கு
மிகப்பெரிய அடி. பா.ஜ.,வின் மக்கள் விரோத போக்கை தொடர்ந்து இணைந்து
கடுமையாக எதிர்ப்போம்.
பாஜவின் பாசிச அரசியலை
எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். மக்களின் விருப்பத்தை
இந்தியா கூட்டணி பூர்த்தி செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற
தொடர்ந்து பாடுபடுவோம்.
பாஜவின் வெறுப்பு
மற்றும் ஊழல்அரசியலுக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதில் அளித்து
உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேவையான நேரத்தில் தேவையான
நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கார்கே கூறினார்.