/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
ADDED : ஆக 29, 2011 11:20 PM
தென்தாமரைக்குளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசுடவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவின் 11ம் நாளை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு கலையரங்கில் 'தானம் ஞானம்' என்ற அய்யா வழி சி.டி., வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. வக்கீல் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். பூஜித குரு பாலபிரஜாதிபதி சி.டி.,யை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அய்யாவழி பாடல்கள் எழுதிய கவிஞர் முருகரசு, தயாரிப்பாளர் தமிழன் கலைக்கூடத்தின் நிறுவன தலைவர் வக்கீல் பாலசந்திரன் மற்றும் கவிஞர்கள் நாராயணதாஸ், பூவை ராஜன் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து கவிஞர் சீதாராமனின் 'அய்யா வைகுண்டர்' என்ற பக்தி நாடகம் நந்தது. பின்னர் அய்யா வைகுண்டசுவாமி இந்திர வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 11ம் நாளான நேற்று காலை அய்யாவுக்கு பணிவிடையும் காலை 11 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலு வீற்றிருக்கும் தேரோட்டம் துவங்கியது. தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் 'அய்யா சிவ சிவ அரகர அரகர' என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தெருவை சுற்றி வந்த திருத்தேர் மாலை 5 மணிக்கு பிரசித்தி பெற்ற வடக்குவாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, தேனி மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 10 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இன்று அதிகாலை பணிவிடை, 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குருக்கள் பால பிரஜாதிபதி அடிகளார், வக்கீல் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் மற்றும் ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.